போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்

ராணுவத்தின் கிழக்கு பிரிவில் சிலிகுரியில் பணியாற்றும் ராணுவ உயர் அதிகாரிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ராணுவ செயல்பாடுகள், எல்லை பகுதிகள் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த ராணுவ அதிகாரி, இது குறித்து ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில், பெங்களூரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது அப்போது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், கர்நாடக மாநில தீவிரவாத தடுப்புப் படை காவலர்களுடன் இணைந்து கேரளாவின் மலப்புரம் நகரைச் சேர்ந்த இப்ராஹிம்.எம்.புல்லட்டி, அவரது கூட்டாளியான தமிழகம், திருப்பூரைச் சேர்ந்த கௌதம் என்பவர்களை கைது செய்தனர். இவர்கள் பாகிஸ்தான் உதவியுடன் இந்திய ராணுவ தகவல் பரிமாற்றங்களையும், இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களையும் சேகரிப்பதற்காக பெங்களூருவில் பி.டி.எம் லே அவுட் பகுதியில் ஆறு டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து நிழலுலக தாதாக்கள் பணம் கேட்டு மிரட்ட பயன்படுத்தவும், இந்த எக்சேஞ்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு தலா 32 போலி சிம் கார்டுகளுடன் 30 அதி நவீன தொழில்நுட்ப மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.