ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொய்யான செய்தி

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இரண்டாவது தலைவர் குருஜி எனும் மாதவ சதாசிவ கோல்வல்கரை பற்றி காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் வெளியிட்ட போலியான செய்தி மீது காவல் துறை, தவறான தகவலை பரப்பியதற்காக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், குணா ஆகிய இரண்டு  மாவட்டங்களில் எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ஐபிசியின் பிரிவுகள் 153-ஏ (இனம், மதம் போன்றவற்றின் மீதான தாக்குதல்), 469 (போலி செய்தி), 500 (அவதூறு செய்தல்), மற்றும் 505 (வதந்திகளைப் பரப்பியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் சமூகத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் வெறுப்பையும் பகைமையையும் உருவாக்கும் நோக்கம் கொண்ட சிங்கின் இந்த பதிவு ஒட்டுமொத்த இந்து சமூகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.

இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவின் உள் நோக்கம் சமூக அமைதியின்மையை உருவாக்குவதாக உள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடக தொடர்பு செயலாளர்  சுனில் அம்பேகர் கண்டனம் தெரிவித்தார்.

இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும், திக்விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ்ஸை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் (பிஎஃப்ஐ) ஒப்பிட்டு இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறியிருந்தார்.

இதே போல  அயோத்தியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆர்.எஸ்.எஸ் தனது இரண்டாவது தலைமையகத்தை அமைக்கப் போவதாக தவறான தகவலைப் பரப்பி சில ஊடக நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ்-ன் புகழைக் கெடுக்க முயன்றன. இது சம்பந்தமாக நியூஸ் 24 ன் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.