மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பா.ஜ.கவின் பிரச்சார மேடைகளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் கோஷம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் மமதா பேனர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற சொல்லே பிடிக்காது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொன்னால் சிறையில் தள்ளுவேன் என பலமுறை கூறியிருக்கிறார் மமதா. மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொன்னதால் அங்கிருந்து வெளியேறியவர் மமதா. தற்போது தோல்வி பயம் காரணமாக கொல்கத்தா காளியின் கோஷத்தையும், சிவனை போற்றும் ‘பம் பம் போலே’ என்ர கோஷத்தையும் கையில் எடுத்துள்ளார். மேலும், தனது வேட்பு மனுக்களை மகா சிவராத்திரி அன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் தான் ஒரு சிவபக்தர் என அவர் போடும் புதிய வேஷத்தில் மக்கள் மயங்கிவிடுவார்கள் என எண்ணியுள்ளார். மக்களின் எதிர்ப்பால், தன் செல்வாக்கை இழந்து வரும் மமதா, தனது பழைய தொகுதியான பவானிபூரில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் தற்போது நந்திகிராமில் உள்ள மித்னாபூர் தொகுதியிலும் சேர்ந்தே மமதா போட்டியிடுகிறார்