அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் துறை இயக்குநர், அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி ஸ்டீபன் பௌசி கொரோனா நோய் குறித்த தகவல்களை வேண்டுமென்றே மறைத்தார். இதில் அவரது பங்கு குறித்து குறித்து யாராவது தகவல் வெளியிட்டால் அவர்களின் பெயர் புகழ் கெடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது என பல பரபரப்புத் தகவல்களை இந்திய நிபுணர்களான டாக்டர் பி.எஸ்.வி.ராவ், பேராசிரியர் மாதவ் நல்பத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக, அவர் தனது மின்னஞ்சலில் கொரோனா ஆய்வகத்தில் உருவானது என அவர் முன்னதாக தெரிவித்த கருத்துகள், பின்னர் அதனை மாற்றிக் கூறியது. முன்னணி தொற்று நோய் நிபுணர் கிறிஸ்டியன் ஆண்டர்சன், டாக்டர் பௌசிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வைரஸின் சில அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை மனிதனால் உருவாக்கப்பட்டது என சூசகமாக தெரிவித்திருந்தது உள்ளிட்ட பல தகவல்களை தெரிவித்தனர். மேலும், பல ஆராய்ச்சியாளர்கள், உளவுத்துறையினர் கொரோனா பரவலில் உள்ள சீனாவின் வுஹான் ஆய்வகத்தின் பங்கை ஆராய விரும்புவதாக தெரிவித்தும் அதனை பௌசியும் அவரை சேர்ந்தவர்களும் முறியடித்தனர். இது, வுஹான் ஆய்வகத்தில் வைரஸ் குறித்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு நிதியளித்திருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாக உள்ளது எனவே, டாக்டர் பௌசியை அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.