ஷாஜியார் அலி என்பவர் பிரோசாபாத்தில் உள்ள எஸ்.ஆர்.கே கல்லூரியில் வரலாற்றுத் துறையின் தலைவராக உள்ளார். அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக அவதூறான கருத்துக்களுடன் ஒரு ஆபாச முகநூல் பதிவை வெளியிட்டார். இதனையடுத்து அமைச்சர் தந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இருந்து தப்பிக்க ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றம்வரை சென்றார் அலி. தன்னுடைய கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டதாக கூறினார். ஆனால், அப்பதிவு அவரால்தான் பதிவிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை கடுமையாக கண்டித்ததுடன் சரணடையவும் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். எஸ்.ஆர்.கே கல்லூரி நிர்வாகமும் இது போன்ற பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களை பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளது.