சென்னையைச் சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ், கோயில்களில் உள்ள நகைகளை ஹிந்து அறநிலையத் துறை உருக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், நகைகளை உருக்க இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘நகைககள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது, அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என அரசு தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டிப்பதாக தெரிவித்தது.