பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தை 2022 மார்ச் மாதத்திற்கு அப்பாலும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கலாம்.முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்குமான ஸ்வநிதி சம்ரிதி அம்சம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2022 நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதல் கடன் தொகையை பெற்றுள்ளனர்.இதில் 5.81 லட்சம் பேர், ரூ.20,000 இரண்டாவது கடனைப் பெற்றுள்ளனர்.இதில் 6,926 பேர் ரூ.50,000 என்னும் மூன்றாவது கடனைப் பெற்றுள்ளனர். 2024 டிசம்பர் மாதத்திற்குள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 42,00,000 சாலையோர வியாபாரிகள் பயன்களைப் பெற உள்ளனர். மக்களவையில், இத்தகவலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.