2020 – 2021 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா தாக்கம், புதிய இணையதளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020 – 2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.