ஏற்றுமதி அதிகரிப்பு

மத்திய வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நமது நாட்டின் ஏற்றுமதி, ஏப்ரல் மாதத்தில் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகரித்து 195.72 சதவீதமாக அதாவது, 2.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்வைக் கண்டிருக்கிறது. இறக்குமதியும், கடந்த ஏப்ரலில் மூன்று மடங்காக, 167 சதவீதம் என்ற அளாவில் அதிகரித்து ரூ. 3.34 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏப்ரலில், நாட்டின் இந்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் பொறியியல் ஆகிய துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன’ என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நாடு தழுவிய ஊரடங்கால் ஏற்றுமதி 75 ஆயிரத்து, 628 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.