ஏற்றுமதி வளர்ச்சி

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அக்டோபர் 2021ல் பாரதத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து) 56.51 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ல் இதே காலக்கட்டத்தை விட 35.16 சதவீத வளர்ச்சியாகவும் அக்டோபர் 2019’ஐ விட 29.13 சதவீத வளர்ச்சியாகவும் உள்ளது. அக்டோபர் 2021ல் ஒட்டுமொத்த இறக்குமதி 68.09 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 57.32 சதவீதமும் அக்டோபர் 2019’ஐ விட 40.82 சதவீதமும் அதிகம்.