உற்சாகமூட்டிய பிரதமர் மோடி

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பாரதத்தின் சார்பில், 126 வீரர்களும் வீராங்கணைகளும் பங்கேற்க உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத்தத்துடன் விளையாட வேண்டாம். முழு திறமையை வெளிப்படுத்துங்கள். ஒலிம்பிக் முடிந்த உடன் நாம் நேரில் சந்திப்போம் என கூறினார். இந்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொண்டனர்.