கூட்டாட்சி முறைக்கு உதாரணம்

நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமையகத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நாடு முழுவதும் தற்போது 810 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. மேலும், 1,000 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.  இதில் சென்னையில் மட்டும் 2வது கட்டமாக 112 கி.மீ தொலைவுக்கான பணிகள் நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக பாரதம் விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை பாரதம் விஞ்சும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு ஒரு உதாரணம்” என்று கூறினார்.