ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பிரவத் ரஞ்சன் பிஸ்வால் என்பவரும் மீடியா குரு கன்சல்டண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து மக்களிடம் முன்னுரிமை பங்குகள் வழங்குவதாக ஆசை காட்டி மோசடியாக டெபாசிட் தொகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் பிரவத் ரஞ்சன் பிஸ்வால் மற்றும் மீடியா குரு கன்சல்டண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமான ரூ. 3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.