தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக ஆங்காங்கு உள்ள ஈ.வே.ரா சிலை மீது காவி துணி போர்த்துவது, எரிப்பது, விபூதி வைத்து விடுவது போன்ற சில கண்டிக்கத்தக்க நிகழ்வுகள் நடக்கின்றன. இது ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க கூட்டணி மீது களங்கத்தை கற்பிக்க திட்டமிட்டே நடத்தப்படும் நிகழ்வாகவே தெரிகிறது. ஈ.வே.ராவுக்கு விபூதி வைப்பதாலோ, காவி துணி போர்த்துவதாலோ அவரது நாத்திக கொள்கைகளை நாம் மாற்றிவிட முடியாது. கடவுளை நம்பும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஈ.வே.ராவை உண்மையாக பின்பற்றுபவர்கள் சதவீதம் மிகவும் சொற்பமே. எனவே தமிழக அரசு இதனை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பும் மக்கள் மன்றத்தின் முன்பும் நிறுத்தி அவர்களின் உண்மையான பின்னணியை வெளிப்படுத்த வேண்டும்.