பிரதமர் மோடியை சமீபத்தில் இசைஞானி இளையராஜா புகழ்ந்து பேசியது திராவிட கட்சிய்னருக்கும், அவர்களை சார்ந்துள்ள ஓட்டு வங்கிக் கட்சியினருக்கும், இதர உதிரிகளுக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், இதுநாள்வரை இளையராஜாவை புகழ்ந்தவர்கள்கூட அவரை சகட்டு மேனிக்கு திட்டி பேசி வருகின்றனர். இந்நிலையில், திராவிட கழக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘தபேலா அடிப்பவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது, காசு வந்துவிட்டால் உயர் ஜாதி ஆகிவிட முடியாது, உணவுக்கு வழியில்லாமல் இருக்கையில், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள், பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்கள்’ என 80 வயதான இளையராஜாவை ஏகவசனத்தில் ஏசியிருக்கிறார். இதற்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.