ஆளுநர் கூறியது அனைத்தும் உண்மை

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அண்மையில் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் தீக்ஷிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க சட்டவிரோதமாக ‘இரட்டை விரல்’ சோதனையை தமிழக அரசு நடத்தியது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து சிதம்பரத்தில் விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர். ஆர்.ஜி. ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “சிதம்பரத்தில் நேற்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக உண்மைக்கு மாறாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது” மாண்புமிகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை. இது தொடர்பான அறிக்கையை ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.