பள்ளிகளில் நன்னெறி கல்வி

கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடத்திட்டத்தில் நன்னெறி கல்வி சேர்க்கப்படும். ‘பகவத் கீதை’, ‘மகாபாரதம்’ மற்றும் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஆகியவையும் ஒழுக்கக் கல்வியின் ஒரு பகுதியாக இருக்கும். எந்த சித்தாந்தங்கள் குழந்தைகளுக்கு உயர்ந்த ஒழுக்கத்தை  கற்பிக்க உதவுகின்றனவோ அதுவே ஒழுக்கக் கல்வியில் ஏற்றுக்கொள்ளப்படும். இது மதம் என்ற கோணத்தில் மட்டும் நின்றுவிடாது. குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு மத நூல்களின் அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், 90 சதவீத குழந்தைகள் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அம்சங்களுக்கு அதிக விருப்பம் இருக்கும், அது தவிர்க்க முடியாதது.

மைசூரு பேரரசின் முன்னாள் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் ‘மைசூரு ஹுலி’ (மைசூருவின் சிங்கம்) என்ற தலைப்பு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படாது. மேலும் உருது பள்ளிகளில் கல்வி கற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், சமகால பாடத்திட்டத்தை அந்த பள்ளிகளில் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். போட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகள் பின் தங்கி விடுவார்கள்ளோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இருப்பினும், மதரஸாக்கள் அல்லது சிறுபான்மையினர் நலத்துறையிடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, திப்பு சுல்தான் குறித்த பாடத்தை பாட புத்தகங்களில் இருந்து கைவிட வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ அப்பாச்சு ரஞ்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அப்படி, திப்பு சுல்தான் பாடம் கற்பிக்கப்பட்டால், திப்புவின் அனைத்து அம்சங்களையும் கற்றுத்தர வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் பாரசீக மொழி திணிப்பு, கன்னட எதிர்ப்பு, குடகில் திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்களையும் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்’ என வலியுறுத்தி அதற்கு பல்வேறு ஆதாரங்களை அவர் முன்வைத்துள்ளார்.