சன் டாவ் என்பவர் புகழ் பெற்ற ஒரு சீன தொழிலதிபர், டாவ் குழுமத்தின் தலைவர். இவர், கொரோனாவை சீன கம்யூனிச அரசு மிக மோசமாக கையாண்டதாக விமர்சித்தார் மேலும், அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஆதரித்தார். இதனால், சீன காவல் அதிகாரிகள், சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் மீது, கலவரத்தை தூண்டுதல், பொது ஒழுங்கை சீர்குலைத்தல், சட்டவிரோத சுரங்கம், அரசு விவசாய நில ஆக்கிரமிப்பு, பொது சேவைக்கு இடையூறு, சட்டவிரோத நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடுத்துள்ளனர். சீன அரசை விமர்சித்ததற்காக கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் முதல் தொழிலதிபர் சன் டாவ் மட்டுமல்ல. அலிபாபா தலைவர் ஜாக் மா உட்பட பலர் சீன அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் தங்கள் அரசை கவிழ்க்க முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிச அரசு, அவற்றின் மீதான கண்காணிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.