தாய் மொழியில் பொறியியல் படிப்புகள்

தமிழ், தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்துவதற்கு கல்லூரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்க மொழிகளில் 2020-21ம் ஆண்டு முதல் பொறியியல் பாடங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், இளநிலை பட்டப்படிப்பை மேலும் 11 மொழிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாய் மொழியில் பொறியியல் படிக்கும் வாய்ப்புடன் அதனை எளிதாக புரிந்து கொள்ளவும் முடியும்.