பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித இமயமலைத் தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 21ம் தேதி செல்கிறார். அவரது பயணத்தின் போது, கௌரிகுண்ட் முதல் கேதார்நாத் மற்றும் கோவிந்த்காட் முதல் ஹேம்குந்த் சாஹிப் வரை இணைக்கும் இரண்டு புதிய ரோப்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கேதார்நாத்தில் உள்ள ரோப்வே சுமார் 9.7 கிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு இடங்களுக்கு இடையேயான பயண நேரத்தை தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து சுமார் 30 நிமிடங்களாக குறைக்கும். சுமார் 12.4 கிமீ நீளம் கொண்ட ஹேம்குந்த் ரோப்வே கோவிந்த்காட்டை ஹேம்குந்த் சாஹிப்புடன் இணைக்கும் ரோப்வே திட்டம், பக்தர்களின் ஒரு நாளுக்கும் மேலான பயண நேரத்தை 45 நிமிடங்களாக குறைக்கும். மேலும், இந்த ரோப்வே கங்காரியாவை இணைக்கும், இது மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு நுழைவாயிலாகும். சுமார் 2,430 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த ரோப்வேக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் நிலையானபோக்குவரத்து முறையாகும், இந்த முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு ஆன்மிக யாத்திரைக்கும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும். பல வேலை வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.