வளரும் பாரத வர்த்தகம்

40வது சர்வதேச இந்திய வர்த்தக சந்தையை (ஐ.ஐ.டி.எப்), மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்து பேசுகையில், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில், பாரதம் உயர்ந்த நிலையில் உள்ளது. உலகளாவிய நுகர்வு சங்கிலியை பராமரிப்பதில், பாரதத்தை நம்பிக்கையான கூட்டணி நாடாக உலக நாடுகள் கருதுகின்றன. கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும், உலக சமுதாயத்துக்கான சேவையை பாரதம் குறைக்கவில்லை. அன்னிய நேரடி முதலீட்டில், இதுவரை இல்லாத உயர்வை பாரதம் கண்டுள்ளது. முதல் 4 மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு இதே கால அளவை விட 62 சதவீதம் அதிகம். வர்த்தகத்துக்கு பாரதம் மீண்டும் திரும்பியுள்ளதை இந்திய சர்வதேச வர்த்தக சந்தை நிருபிக்கும். பொருளாதாரம், ஏற்றுமதி, கட்டமைப்பு, தேவை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை பாரதத்தின் 5 சூத்திரங்கள். சிறந்த கட்டமைப்பு, சிறந்த வளர்ச்சிக்கான தேவை, வளர்ச்சியில் பன்முகத்தன்மை ஆகியவற்றால் பொருளாதார மறுமலர்ச்சியின் மையமாக பாரதம் மாறும். பாரத சர்வதேச வர்த்தக சந்தை ‘தற்சார்பு பாரதம்’ திட்டத்தை ஊக்குவிக்கும். இது உலகளாவிய தயாரிப்புக்கு குரல் கொடுக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்’ என உரையாற்றினார்.