வளரும் பாரதப் பொருளாதாரம்

இந்த நிதியாண்டில் பாரதப் பொருளாதாரம் 9.3% சதவீதம் வளர்ச்சி அடையும் என ‘மூடிஸ்’ முதலீட்டாளர் சேவை சர்வதேச அமைப்பு கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் பாரதப் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டான 2021 – 2022ல் பொருளாதாரம் 9.3 சதவீதம் வளர்ச்சி அடையும். மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொருளாதார நடவடிக்கைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. ஆனால் இதன் தாக்கம், கொரோனா முதல் அலையைப்போல் கடுமையாக இருக்காது.ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படலாம். அதன்பிறகு பொருளாதாரம் மீண்டெழும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடப்பு நிதியாண்டு முடிவடையும்போது, 9.3% பொருளாதார வளர்ச்சி ஏற்படும். 2022 – 2023க்கான அடுத்த நிதியாண்டில், 7.9% பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.