தி.மு.கவின் வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்று கூறி ஒரு உண்மையை போட்டுடைத்தார் கிறிஸ்தவ பாதிரி ஜார்ஜ் பொன்னையா. இது பெரும் சர்ச்சையானது. அவரைத் தொடர்ந்து இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜமாத்தில் இமாம்கள் தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியுள்ளார்.
இஸ்லாமியர்கள் பொது மேடையில் பேசுவதை கவனிப்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் அது கண்டிப்பாக செயல்படுத்தப்படும். பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள். இதனால் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது என்று கூறியுள்ளார்.
வழிபாடு நடைபெறும் இடங்களில் மத கூட்டங்களில் அரசியல் பேசக்கூடாது. இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என எவ்வகையிலும் யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என விதிக்கப்படும் தேர்தல் ஆணைய சட்டங்களை ஹிந்துக்கள்தான் பின்பற்றுகின்றனர். மற்ற மதத்தினர் யாரும் பின்பற்றுவதில்லை. இது போன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்களை மாநில அரசுகளும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதையே இந்த நிகழ்வுக்சள் எடுத்துக்காட்டுகின்றன.
மக்களும் நமக்கு நன்மை செய்பவர் யார், எந்த கட்சி நாட்டை முன்னேற்றுகிறது, யார் உண்மையான மதச்சார்பற்றவர், யார் மக்களுக்கும் நாட்டுக்கும் உண்மையாக தொண்டாற்றுபவர், யார் வாக்குறுதியை நிறைவேற்றுபவர், யார் ஏமாற்றுக்காரர், பிரிவினையை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்கள் யார், தேசத்தை ஒற்றுமைப்படுத்த பாடுபடுபவர் யார், மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர் யார்? என்பதை எல்லாம் ஆராயாமல், மதத்தலைவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு கண்மூடித்தனமாக வாக்களிக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலை மாற வேண்டும், மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் நாட்டில் உண்மையான முழுமையான ஜனநாயகம் மலரும். தேசம் முன்னேறும், மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.