நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் நடந்துக் கொள்ளும் விதம் தமிழக மக்கள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த பாரத மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஓரிரு நாட்களுக்கு தர்மபுரி தொகுதியின் தி.மு.க எம்.பியான செந்தில்,’பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்பதன் அர்த்தம் புரியவில்லை என்கிறார். இதற்கு பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ’இந்திரா ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் இருந்தபோது அவருக்கு இது புரிந்துள்ளது. ஆனால், அதே பிரதமர் பெயரில் உள்ள திட்டம் என்றால் இவருக்கு மட்டும் அது புரியவில்லை. இது குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புரிகிறது என்று கூறினார். இதுமட்டுமல்ல, சானிடரி நாப்கினுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்து 4 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நாப்கினுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. முக்கியமா? என்று தி.மு.க. எம்.பி. அப்துல்லா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேட்டு தமிழக மானத்தை வாங்கினார். தி.மு.கவின் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான வில்சன் தமிழகத்தில் உள்ள புனித தலங்களின் பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்கான 2020 – 21ம் ஆண்டிற்கான நிதியினை உடனே வழங்க வேண்டும் என்று கடந்து ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், சென்னை, புதுச்சேரிக்கு 800 கோடி ரூபாய் பணம் முன்பே வழங்கப்பட்டு, அதில் பாதி தொகை ஏற்கனவே செலவழிக்கப்பட்டும் விட்டது. புதிய திட்டங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என அமைச்சர் மீனாட்சி லேகி கூறி வில்சனின் அறியாமையை வெளிப்படுத்தினார்.