தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, மின் பயன்பாட்டுக்கான கட்டணங்களை அநியாயமாக சமீபத்தில் உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்தது. இதற்கு தமிழக மக்கள், எதிர்கட்சிகள் மட்டுமில்லாது தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பத் தெரிவித்துள்ளன. இந்த மின் கட்டண உயர்வு அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னமும் மீளாத நிலையில் தற்போது, தி.மு.க அரசு, புதிய மின் இணைப்புக்கான பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டண பல்வகை கட்டணங்களையும், ஸ்மார்ட் மீட்டர் கட்டணத்தையும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இதேபோல உயரழுத்த, தாழ்வழுத்த பிரிவுகளில் மீட்டர் வாடகை கட்டணம், மீட்டரை மாற்றும் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான பல்வகை கட்டணங்களையும் உயர்த்துயுள்ளது.