தி.மு.க அரசு மிகக் கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து தி.மு.கவின் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்கப்படும். இது குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் விவாதிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்; அது பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் மாற்றமில்லை. மற்ற மின் கட்டண உயர்வில் எவ்விதமான மாற்றமும் இல்லை’ என கூறியுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்த்தப்பட்ட வீட்டு வரி, விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்களின் விலை, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் அல்லல்படும் தமிழக மக்களுக்கு அமைச்சரின் இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.