மின்சார சார்ஜிங் நிலையங்கள்

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமான ஹெச்.பி.சி.எல் அடுத்த மூன்று ஆண்டுகளில் 5,000 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மின்சார வாகன சார்ஜிங் சந்தையில் கணிசமான பங்கைக் கைப்பற்ற இத்திட்டத்தை செயல்படுத்துகிறது ஹெச்.பி.சி.எல். அதுமட்டுமில்லாமல், இதனால்அந்நிறுவனத்துக்கு சொந்தமான 19,000 எரிபொருள் நிலையங்களின் தேசிய அளவிலான நெட்வொர்க்கை மேம்படுத்தவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடியும். இந்நிறுவனம் தற்போது சுமார் 85 சார்ஜிங் நிலையங்களைக் கொண்டுள்ளது. ஹெச்.பி.சி.எல், இத்திட்டத்தை திறந்த பங்களிப்பு என்ற முறையில் இதனை செயல்படுத்துகிறது. அதில், டாடா மோட்டார்ஸ், கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் பங்காளிகளாக இணைந்துள்ளன.