பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது. இந்நிலையில், ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழ் கோவாக்சின் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 2020 நவம்பர் முதல் 2021 மே மாதம் வரையில் பாரதத்தில் 18 முதல் 97 வயதுள்ள சுமார் 24,419 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான இறப்புகளோ, பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை. கோவாக்சின் தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு பிறகு 77.8 சதவீத நோய்தடுப்பு செயல்திறன் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக 65.2 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.