பாரதம் ஆஸ்திரேலியா இடையே கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய கல்வியமைச்சர் ஜேசன் கிளேர் தலைமையில் அந்த நாட்டின் உயர்கல்வித் துறை பிரதிநிதிகள் குழு பாரதம் வந்துள்ளது. அவர்கள் பாரதத்தில் கல்வித்துறை தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வித்துறை அதிகாரிகள் என பலரையும் சந்தித்து பேசி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, டெல்லி பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற ஒர் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கலந்து கொண்டு பேசுகையில், “பாரதத்தின் தேசிய கல்விக் கொள்கை தேசத்தை மாற்றும் ஒரு முன்னோடியான கொள்கை. இது பாரதத்தை மாற்றுவதுடன் அதன் இளைய தலைமுறையை உலகத் தரத்தில் திறமைப்படுத்தும். தேசிய கல்விக் கொள்கை பாரதத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக மாற்றும். பாரத ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இது கல்வித் துறையில் சிறந்த கூட்டாண்மையை உருவாக்கும். தற்போது, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்கள் படிப்புகளை வழங்குகின்றன. இப்போது அவை படிப்புகளை வழங்குவதுடன் சேர்த்து உலக நாடுகளில் கல்வி வளாகங்களை நிறுவுவதை நோக்கி நகர்ந்து வருகிறது” என கூறினார்.