பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களால் நாட்டின் பொருளாதார ஸ்தரத்தன்மை மற்றும் அனைத்து நிலைகளையும் தாங்கும் திறன் ஆகியவை அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கியின் பணக்குழு கொள்கை உறுப்பினர் அஷிமா கோயல் கூறியுள்ளார். மேலும், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் முறையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது, இதனால் நாட்டின் பொருளாதார வலு அதிகரித்துள்ளது. மேலும் சீர்கேடுகளை தாங்கும் திறனும் அதிகரித்துள்ளது. பொருத்தமான பொருளாதார கொள்கை மற்றும் தொடர்ச்சியான விநியோகம் மேம்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியா உலக அளவில் சிறந்த எழுச்சி பெற முடிந்துள்ளது மோடி வருவதற்கு முன்பு உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக நாடு கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்தது. கடந்த 8 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முறையான சீர்திருத்தங்களால் உலக அளவில் ஏற்பட்ட பல அதிர்ச்சிகளை பாரதத்தால் தாங்க முடிந்துள்ளது. இக்காலகட்டத்தில் அரசும், தொழில் துறையும் இணைந்து பணியாற்றக் கற்றுக் கொண்டதன் வாயிலாக பொருளாதாரம் பலம் பெற்றுள்ளது’ என கூறினார்.