கொரோனா தொற்று காரணமாக பள்ளிப் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியாக நடத்தப்படுகின்றன. சமீபத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதால் குழந்தைகளுக்கு அதிகவேலை, சிரமம் இருப்பதாக காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அங்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அம்மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்பட வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.