ஈ.வே.ராமசாமியை குறித்து மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள், கேள்வி பதில் போட்டிகள் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஈ.வே.ரா விஞ்ஞானியோ அறிவியியலாளரோ, நிபுணரோ அல்ல. அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் ஏதாவது அவர் எழுதியுள்ளாரா? இது ஈ.வே.ராவை பற்றி பள்ளி பாடங்களில் புகுத்த திட்டமிட்டு தி.மு.க அரசால் நிகழ்த்தப்படும் ஒரு திட்டமிட்ட சதி. ஈ.வே.ரா நாட்டுக்கு சுதந்திரம் வேண்டாம் என சொன்னவர், தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னவர், தமிழர்களை காட்டுமிராண்டிகள் என சொன்னவர். துணிமணிகள் விலை ஏறும் என்பதால் பெண்கள் ஜாக்கெட் அணியக்கூடாது என சொன்னவர். அப்படிப்பட்ட ஈ.வே.ரா குறித்த போட்டிகளை இந்து முன்னணி வண்மையாக கண்டிக்கிறது” என கூறினார். மேலும், “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலை வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ‘பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசபக்தியை வளர்ப்போம்’ என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது” என கூறினார்.