ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், விரிவான மின்னணு வர்த்தக கொள்கையை வகுப்பதில், அரசின் தபால் துறை, ரிசர்வ் வங்கி, சுங்க இலாகா போன்ற துறைகளுடன் இணைந்து நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த கொள்கைகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் தயாராகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவான கொள்கை மூலம் ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு, ஆன்லைன் வழியாக பொருட்களை வழங்குவது மேலும் எளிதாக்கப்படும்.