ரியல் எஸ்டேட் மேம்பாடு, தொழில்துறை பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், சரக்கு போக்குவரத்து, மருத்துவக் கல்லூரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல உள்கட்டமைப்புகளை உருவாக்க துபாய் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் கையெழுத்திட்டது. ‘இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் வேகத்தை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதற்கும் ஒரு வலுவான சமிக்ஞையை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கிறது. உலகளாவிய சக்தியாக பாரதம் மாறுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஜம்மு காஷ்மீர் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து முதலீடுகள் இங்கு குவியும்’ என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.