போதைப்பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது

கேரளாவில் , புதியவகை போதை மருந்து வைத்திருந்த முஹமது, அன்சாரி, ராம்ஷீத் மற்றும் பாஹித் ஆகியோரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து .5 கிராம் எம்.டி.எம்.ஏ வகை போதை மருந்து கைப்பற்றப்பட்டது. எம்.டி.எம்.ஏ என்பது எக்ஸ்டசி, ஈ, மோலி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ‘3,4 – மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன்’ என்ற புதிய தலைமுறை போதை மருந்து. இளைஞர்கள் பெரும்பாலும் இரவு கேளிக்கை விருந்துகளின் போது போதைப்பொருள் விற்பவர்களை சந்திக்கிறார்கள். போதைப்பொருள் வர்த்தகம் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால், பல இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெருமளவு நிதி திரட்டுகின்றன. அவை தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.