ஹிந்துக்கள் பண்டிகையின் போது ஒரு வாழ்த்துக்கூட தெரிவிக்காத தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ‘கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஓடோடி சென்று பங்கு கொண்டார். ஸ்டாலின் முன்னிலையில் மத போதகர் ஒருவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு மேலும் அனுமதி அளித்தால், கிறிஸ்தவ மதத்தில் உள்ள பெந்தகோஸ்தே பிரிவினர்களின் 60 லட்சம் பேரின் வாக்குகளும் தி.மு.கவிற்கு கிடைக்கும் என்று பேசியுள்ளார். ‘தி.மு.க வெற்றி பெற்றது என்றால், அது கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் போட்ட பிச்சை’ என்று, கன்னியாகுமரி மாவட்ட பாதிரி ஜார்ஜ் பொன்னையா கடந்த ஜூலையில் பேசினார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. மேலும், பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்து வழிபாடு செய்தபோது, மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் எவ்வாறு சமய சடங்குகளை செய்யலாம் என்று விமர்சித்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?