கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமீபத்தில் ஒரு சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிவறைகள் கட்டப்பட்டன.ஆனால், அது ஓரே கழிவறையை இருவர் பயன்படுத்துவது போன்று வடிமைக்கப்பட்டிருந்தது.அதன் புகைப்படம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்திற்காக (சிப்காட்) 1.80 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திலும் ஒரே கழிப்பறையை இருவர் பயன்படுத்துவது போன்று கட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நகைச்சுவையாக மாறியது. இதனையடுத்து அவசர அவசரமாக இரண்டுக்கும் இடையே மெல்லிய பிளைவுட் தடுப்பை ஏற்படுத்தினர்.ஆனால், அதன் பின்பு அது பயன்படுத்த முடியாத அளவில் மிகவும் குறுகலாக மாறிப்போனது.இதனிடையே, ஸ்டாலினின் மகனும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.தனது பெயரிலான அறக்கட்டளை உதவியுடன் சேப்பாக்கம் திருவல்லிகேணி பம்பிங் ஸ்டேஷன் ரிச்சி தெரு சந்திப்பில், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறையை சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில், இரண்டு கழிவறைகளுக்கு இடையே உள்ள சுவரின் உயரம் 3 அடி மட்டுமே, கதவுகளும் கிடையாது என நவீனதிராவிட மாடலில் அமைக்கப்பட்டிருந்தது காண்போரை எள்ளி நகையாட வைத்தது.