திராவிட மாடல் கழிப்பறை?

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே பிள்ளைப்பாக்கத்தில் சிப்காட் திட்ட அலுவலகம், 1.80 கோடி ரூபாய் மதிப்பில், 4,784 சதுர அடியில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 10ம் தேதி நடந்தது. தி.மு.க முதல்வர் ஸ்டாலின் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இதனை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தின் உள்ளே ஒரே கழிப்பறையில் அருகருகே இரண்டு ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ அமைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘ஒரே அறையில் இரண்டு பேர் டாய்லெட் செல்வது தான் திராவிட மாடலா, இது திராவிட மாடல் கழிப்பறையா?யாருப்பா அந்த திராவிட மாடல் இஞ்சினியர்?’ என, சமூக வலைத்தளத்தில் இந்த படம் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவசர அவசரமாக கழிப்பறையின் குறுக்கே ‘பிளைவுட்’ தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த கழிப்பறை, 2.5 அடி அகலத்தில் குறுகலாக காணப்படுகிறது. இதுவும் சமூக ஊடகத்தில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.