டி.ஆர். பாலு வழக்கு நகைப்புக்குரியது

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன். அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் குடும்பத்தினர் பெரிய நிறுவங்களை நடத்தி வருவதால் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாகவே நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளர். பால் விலையை புதிதாக வந்துள்ள பால்வள்த்துறை அமைச்சர் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ விவகாரத்திற்காக பி.டி.ஆர் துறை மாற்றப்பட்டது தவறு. 3 தலைமுறையாக மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணித்து கொண்டது என பி.டி.ஆர் குடும்பத்தை முதல்வரே பாராட்டியுள்ளார். ஆடியோவில் பி.டி.ஆர் பேசியது உண்மை தான். பி.டி.ஆர் ஆடியோ வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடந்தால் தானே ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்” என கூறினார்.