கோயில் நில மீட்பில் சந்தேகம்

ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் குறித்த வரலாற்று ஆய்வு நூல்களை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட பா.ஜ.க மூத்த தலைவர் இல கணேசன் பெற்றுக்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகள் வியப்பாக இருக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு ஆலயத்துக்கு போகிறார், ஆய்வு செய்கிறார். பலகோடி ரூபாய் நிலங்களை மீட்டுள்ளார் என செய்தி வருகிறது. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பது என்பது ஒரு பட்டனை தட்டினால் ஏற்படக்கூடிய விஷயமாக இருக்குமானால் இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் இதை ஏன் செய்யவில்லை? என்ற கேள்வி வருகிறது. அதனால் நடப்பது குறித்து மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தேகம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என தெரிவித்தார்.

முன்னதாக வடபழனி கோயில் நிலத்தை மீட்டுள்ளோம் என பத்திரிகையாளர்களை அழைத்து பெருமை பேசிய தி.மு.கவை சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு, அதே வடபழனி கோயிலின் 1,600 சதுர அடி நிலத்தை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க இசைந்தது ஏனோ. ஒருவேளை நிலங்களை மீட்பது மாற்று மதத்தினருக்கும் தங்களது கட்சியினருக்கும் தாரைவார்க்கத்தானோ? நீதிமன்ற உத்தரவுப்படிதான் நிலங்கள் மீட்கப்படுகின்றன ஆனால், தாங்களே ஏதோ புதிதாக சாதித்ததுபோல இவர்கள் காட்டிக்கொள்கின்றனர். கோயில் நிலங்களை அள்ளிக்கொடுக்க இவர்கள் யார்? என சமூக வலைத்தளவாசிகள் கடந்த சில நாட்களாகவே விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.