பாரதம் தனது 75 வது சுதந்திர ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கேற்ப பல்வேறு விவசாய முன்னோடித் திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, ஜம்மு காஷ்மீரின் உதம்பூரின் பிளாக் மஜால்டாவில் உள்ள சத்ராரி பஞ்சாயத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு, அம்மாவட்ட நிர்வாகம் வேளாண் துறையுடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்தது. பல நவீன உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தது. அவற்றின் துணையுடன் அந்த விவசாயிகள் இப்போது இரட்டிப்புக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை வேளாண் அலுவலர் சுபாஷ் சந்தர் சர்மா, ‘ கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும் விவசாயிகள் தங்கள் விளைச்சலை சந்தைப்படுத்துவதில் பிரச்சனைகள் வராமல் இருக்க, அவர்களுக்கு வேறு பல திட்டங்களின் கீழ் சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்’ என கூறியுள்ளார்.