தெரெசா குறித்த ஆவணப்படம்

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மறைக்க அன்னை தெரசா எவ்வாறு கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு உதவினார் என்ற திடுக்கிடும் உண்மைகளை மூன்று பகுதிகள் கொண்ட புதிய ‘ஸ்கை’ என்ற ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ளது. சுமர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெரசாவுடன் பணிபுரிந்த மேரி ஜான்சன் வெளியிட்டுள்ள இந்த ஆவணப் படத்தில், ‘பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்களுக்கு மேலிடம் தெரசாவை அனுப்பும். தெரசாவும் அவருக்குள்ள நற்பெயரை பயன்படுத்தி அவற்றை மாற்றவும் மறைக்கவும் செய்வார்’ என தெரிவித்துள்ளார்.

தெரசாவின் தத்துவத்தை விளக்கிய மேரி ஜான்சன், “அவரது ஆன்மீகம் சிலுவையில் இருந்த இயேசுவோடு இணைக்கப்பட்டது. அவர் வலியில் தன் உயிரைக் கொடுத்தார். இதனால் துன்பத்துடன் தன்னைக் கொடுப்பதே மிகப் பெரிய மதிப்பு என்று தெரெசா நம்பினார். துன்பம் உலகை மீட்டது. ஏசு ஏழையாக இருந்ததால் மக்கள் ஏழையாக இருப்பது நல்லது என்று அவர் நினைத்தார். இது ஒருவகை மனச்சிதைவு நோய்” என தெரிவித்துள்ளார்.

‘ரெவரெண்ட் டொனால்ட் மெகுவேர் என்ற பாதிரி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து தெரெசாவுக்கு எவ்வளவு விஷயம் தெரியும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. எனினும், அந்த பாதிரி மீது தனக்கு நம்பிக்கையும் நல்லெண்ணமும் இருப்பதாக ஒரு வலியுறுத்தல் கடிதத்தை தெரெசா அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பினார். இது ரெவரெண்ட் டொனால்ட் மெகுவேர்  மேலும் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு சுதந்திரம் அளித்தது’ என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

தெரெசாவின் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய  பிரிட்டிஷ் மருத்துவர் ஜாக் ப்ரீகர், “தெரெசாவின் கன்னியாஸ்திரிகள் நோயாளிகளுக்கு சரியான கவனிப்பை வழங்கவில்லை. அவர்களுக்கு போடப்படும் ஊசிகள் கிருமி நீக்கம் செய்யப்படாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. தீக்காயங்களுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு வலிநிவாரணி கள் தர மறுக்கப்பட்டன. நான் அந்த பெண்மணிக்காக சில மாத்திரைகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்து வந்து கொடுத்தேன். ஏழை மக்களுக்காக ஒரு கண்ணியமான மருத்துவமனையை நடத்துவதற்கு அவர்களிடம் போதிய பணம் இருந்தது.  ஆனால் அவர்கள் அதனை ஒருபோதும் செய்யவில்லை. சிகிச்சை அளிக்காமல் ‘வலி குறைய பிரார்த்தனை செய்வோம்’ என்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அரூப் சாட்டர்ஜி, 2016ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், தெரிசாவின் அமைப்பில் தான் சந்தித்த சில தவறான செயல்களை விளக்கினார். மேலும், 2003ல் வெளியிடப்பட்ட “அன்னை தெரசா: இறுதி தீர்ப்பு” என்ற புத்தகத்தில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஹிந்துக்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துவது, பெண்கள் தங்கும் இல்லத்தில் உள்ள சிறுமிகள் கழுத்தில் சிலுவையை கட்டாயமாக அணிய வைத்து, பைபிளைப் படிக்கும்படி கட்டாயப்படுத்துவது. அவர்கள் பயன்படுத்தும் ஸ்டோர் ரூம், மேஜைகளின் மீது பைபிளை வைத்து அதனை படிக்க வைக்க ஆசையை தூண்டுவது உள்ளிட்ட கட்டாய மதமாற்றக் காரணங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பரில், குஜராத்தில் தெரெசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி ஆதாரம்: https://organiser.org/2022/05/09/80232/bharat/mother-teresa-helped-in-covering-up-sexual-abuse-cases-of-church-new-documentary-reveals/