தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க அரசில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சராக இருப்பவர் கீதா ஜீவன். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர தி.மு.க.வின் சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, ’அண்ணாமலையை’ ஒருமையில் விமர்சனம் செய்தார். பா.ஜ.க. தலைவர் பேசி கொண்டு இருக்கும் மேடையில் நாங்கள் ஏறுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.அவரின் இந்த அநாகரீகமான பேச்சிற்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களான நாராயணன் திருப்பதி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.உடனே, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள், கட்சி குண்டர்கள் சிலர், சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தினர்.சசிகலா புஷ்பா அங்கு அப்போது இல்லாததால் இந்த கொலைவெறி தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு வரும் கீதா ஜீவன் வருகையையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகளை தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் காவல்துறையின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர் மற்றும் மானூர் ஒன்றியத் தலைவர் சுப்புத்துரை ஆகியோரை இன்று அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா?தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா?உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.