தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதையடுத்து அதனை நமது பாரதத்தில் சில முஸ்லிம்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பக, தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து உளவுத்துறை விசாரித்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமையும் விசாரணை மேற்கோண்டு வருகிறது. கோவையில் ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து லேப்டாப், சி.டி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர், சிலர் கைது செய்யப்பட்டனர். கேரளாவிலும் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். கனகமலை பகுதியில், ஆறு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக கோவையில் சோதனையிட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால், தற்போது கோவை சுர்றுவட்டாரப் பகுதிகள், கேரளாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களின் சமூகவலைதள கணக்குகள், நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.