தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ல ஒரு அறிக்கையில், “இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியில் கோயிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார் கோயிலுக்கு செல்லும்போது, பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோயிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா? மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த தி.மு.க அரசின் நடவடிக்கையை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.