ஹிந்துவிரோத தி.க, தி.மு.கவினர் எதிர்ப்பால் எழுந்த மக்களின் விழிப்புணர்ச்சி காரணமாக, இந்த ஆண்டு தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் வழக்கத்தைவிட அதிக உற்சாகத்துடன் நடந்தது. பா.ஜ.க, பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், இந்து முன்னணி, வி.ஹெச்.பி போன்ற பல ஹிந்து அமைப்புகள் தெரிவித்த கடும் எதிர்ப்பால் தி.மு.க அரசு வேறு வழியின்றி பின்வாங்கியது. இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்திலேயே ஆதீன பிரவேசத்தை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று தருமபுரம் சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்றார் எடப்பாடி பழனிசாமி. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது. எம் மதத்தையும் சம்மதம் என்று பார்க்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழிமுறைகளில் தலையிடக் கூடாது. ஆதீன விவகாரங்களில் திட்டமிட்டு தி.மு.க அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது. யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்” என பேசினார்.