நீரோட்டத்துக்கு இடையூறு கூடாது

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோட்டில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் காங்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், கடந்த ஏப்ரலில், நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று அதன் மறு விசாரணையின்போது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. துல்லியத்திற்காக ஜிபிஎஸ், டிரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படும். ஈரோடு பெரும்பள்ள ஓடை திட்டத்திர்கு மக்கள் ஆதரவு உள்ளது. அது மழைநீர் வடிகால் மட்டுமே என தெரிவித்தது தமிழக அரசு. ஆனால், நீரோட்டத்துக்கு இடையூறாக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனுதாரர் புகார் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை டிரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுப்பதுடன், நேரடியாக அளவீடு செய்து நீர்நிலைகளின் அளவுகளை துல்லியமாக பாதுகாக்க வேண்டும், நீரோட்டத்துக்கு இடையூறாக எந்த கட்டுமானமும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டனர்.