பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சமூக ஊடகப் பதிவில், ‘நீட் தேர்வில் தி.மு.க சொன்ன இன்னொரு பொய் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மருத்துவ சுகாதார இயக்குநரகத்தின் தரவுகளின்படி, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் 2021 – 22 சேர்க்கை அமர்வுக்கு, தகுதியான 24,949 விண்ணப்பதாரர்களில், 14,618 பேர் நீட் பயிற்சி எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதாவது தகுதியான விண்ணப்பதாரர்களில் 59 சதவீதம் பேர் நீட் பயிற்சி எடுக்கவில்லை. ஆனால், 99 சதவீத மாணவர்கள் நீட் கோச்சிங் எடுத்தார்கள் என்று வெட்கமின்றி பொய் சொன்னது தி.மு.க. இந்த பொய்யான, கற்பனையான தரவுகளை ஏ.கே.ராஜன் கமிட்டிக்கும் அளித்தனர். மு.க.ஸ்டாலினும் அவரது சகாக்களும் நீட் விஷயத்தில் எந்தளவுக்குத் தற்காத்துக் கொள்ள முயல்கிறார்களோ, அவ்வளவு உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.