சில தினங்களுக்கு முன் தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார். இந்த ஈனத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க கூட, தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினும் , கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக ராசாவை கண்டிக்க முன் வரவில்லை. இந்த செய்தி வெட்டியும், ஒட்டியும் வெளியிட்டுள்ளார்கள், நீதி மன்றத்தில் வழக்கு வருமானால் நான் சந்திக்க தயாராக இருப்பதாக ராசா கூறியுள்ளார். தான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் செய்தி என கூறும் ராசா நான் அது மாதிரி பேசவில்லை என கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. தலைவர்களுக்கு ஈனத்தனமாகவும், அநாகரீகமாவும் ஒரு தலைவரை விமர்சனம் செய்வதில் கில்லாடிகள் என்பது உலகிற்கு தெரிந்த ரகசியமாகும்.
தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என நாகூாமல் எழுதியவர். அரைநிர்வாணக் கோலம் கொண்டு, ஆட்டுப்பால் அருந்தி, அந்தராத்மாவுடன் அளவளாவத் தொடங்கினாரோ, என வர்ணனை செய்தவர் அண்ணாதுரை. 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை , அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர். இதன் வழித் தோன்றல்கள் தான் பல்வேறு கால கட்டங்களில் அருவருக்க தக்க வகையில் பெண்களை விமர்சனம் செய்தார்கள். . பருவப் பெண்களின் தோள்களில் கைப்போட்டு பவனி வரும் காந்தி என இழிவாக விமர்சனம் செய்தவர் கருணாநிதி.
1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கரின் வழித் தோன்றல்கள். சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார். கருணாநிதி அளவுக்கு வெளிப்படையாக ஆபாசமாகப் பேசும் கட்சித் தலைவர் வேறு யாரும் இந்தியாவில் இருப்பார்களா என்பது சந்தேகமே.
சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி. மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர். தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
திமுகவின் வெற்றிக் கொண்டான் ஆபாச நரகலை மேடைப் பேச்சு என்ற பெயரில் கடைப் பரப்புவார். அப்படிப்பட்டவர் இறந்த போது கருணாநிதி மிக வருந்தி எப்போதும் போல் கவிதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு அந்தக் கேவலமான மனிதரை “ஆண் சிங்கம்”, “வார்த்தை சித்தர்” என்றெல்லாம் அரற்றினார். மேடை பேச்சுகளில் எதிர் கட்சியினரை ஆபாசமாகப் பேசுவது திராவிட அரசியலின், போக்காகும். 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான். அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி. முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.
திமுக.வில் தலைவர்கள் மட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட தலைவர்களும் ஆபாசமாக பேச சளைத்தவர்கள் இல்லை திருச்சியில் நடந்த மாநாட்டில் திருச்சி செல்வேந்திரன் “பின்னாலே பார்க்காதீங்கன்னு ஜெயலலிதா சொல்லுது முன்னாலே பார்த்தாலே அசிங்கமாயிருக்கு. அதனாலேதான் பின்னாலே பார்க்காதீங்கன்னு சொல்றாங்க” திருமதி சற்குண பாண்டியன் “ஒரு பெம்பளை.. .கதவு தொறந்தே இருக்கு. யார் வேணும்னாலும் வரலாம் சொல்றியே உணக்கு வெட்கமா இல்லையா? பழைய ஞாபகமா? இம்முறை மக்கள் உன்னை தோற்கடித்து மீண்டும் அதற்குத்தான் அனுப்பப் போகிறார்கள்” பரிதி இளம்வழுதி ” அம்மாவோட கதவு திறந்திருக்கு. எல்லோரும் வாங்க, எல்லோரும் வாங்கன்னு கூப்பிட்டவன் ( காளிமுத்து), அப்பல்லோவில் போய் படுத்திகிட்டான்.
இப்ப போறவன் கதி என்ன ஆகப் போகுதோ” தி.மு.க. தலைவர்களின் எழுத்துக்களில் ஆபாசம் சற்று தூக்கலாகவே அமைந்திருக்கும். அண்ணாதுரை எழுதிய கம்பரசம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ரோமபுரி ராணிகள், ஆரிய மாயை போன்ற நூல்களில் காம விமர்சனங்கள் வெளிப்படையாக இருக்கும். 1970-களில் தி.மு.க பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் , வெற்றிக் கொண்டான், போன்றவர்கள், எதிர்கட்சித் தலைவர்களை ஆபாசமாகவும், அருவருப்பாகவும் பேசுவதே தங்களின் தலையாய கடமையாக கருதினாநர்கள். ஒரு பொதுக் கூட்டத்தில், தீப்பொறி ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் வீட்டிற்கு நான் போயிருந்தப்ப அவருடைய மனைவி தந்த வெள்ளி டம்ளரில் இருந்த பாலை குடித்து விட்டு, டம்ளரைத் திருடிட்டுப் போயிட்டேன் என்று மேடைக்கு மேடை பேசுகிறார். இன்று இதற்கு பதில் கூறி விட வேண்டும், நான் அவர் வீட்டுக்கு போனது உண்மை, அவரோட மனைவி பால் தந்தது உண்மை. நான் பால் குடிச்சது உண்மை. ஆனால் வெள்ளி டம்ளரில் இல்லை. புரிஞ்சவன் புரிஞ்சுக்க, புரியாதவன் எங்கிடாச்சும் போ என பொது மேடையில் பேசியவருக்கு தான் அதிக அளவில் பொதுக் கூட்ட மேடை அமைத்து கொடுத்தவர்கள் தி.மு.க.வினர்.
-ஈரோடு சரவணன்