காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஞானசேகரன். இவரது கார் டிரைவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகன தணிக்கையில் அவரிடம் இ-பாஸ் இல்லாததால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தார் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன். உடனே, சம்பவ இடத்துக்கு வந்த ஞானசேகரன், உடனடியாக இருசக்கர வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரை மிரட்டியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது வேகமாகப் பரவி வருகிறது. காவல்துறையினரின் செயல்பாடுகளில் எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.கவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியும், அதனை கொஞ்சமும் மதிக்காமல் செயல்படுகின்றனர் தி.மு.கவினர். முதல்வர் இது போன்றவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுப்பாரா?